×

சுவரை உடைத்து பாதையாக பயன்படுத்துவதால் பயனற்று கிடக்கும் தடுப்பணை

உடுமலை, மே 22:  செக்டேம் தடுப்பு சுவரை உடைத்து வழித்தடமாக பயன்படுத்துவதால் தண்ணீர் தேங்காமல் பயனற்று கிடக்கிறது. இதை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  மடத்துக்குளம் ஒன்றியம் மெட்ராத்தி கிராமத்தில், செக்டேம் (தடுப்பணை) உள்ளது. மழைக்காலங்களில் மெட்ராத்தி குளத்தில் இருந்து வரும் தண்ணீர் தடுப்பணையில் நிரம்பி, குமாரமங்கலம் வழியாக அமராவதி ஆற்றில் கலக்கும். ஆனால் இந்த தடுப்பாணையின் தடுப்புசுவரை சிலர் உடைத்து, வண்டித்தடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கடந்த சில ஆண்டாக தடுப்பணையில் தண்ணீர் தேங்குவதே இல்லை.

இந்த தடுப்பணை மூலம் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெற்று வந்தது. நிலத்தடி நீர்மட்டம் உயரவும் காரணமாக இருந்தது. தற்போது தண்ணீரின்றி காய்ந்து கிடக்கிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக இந்த தடுப்பணையின் கரையை சீரமைத்து, தண்ணீரை சேமிக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : blocking ,
× RELATED தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு; அரசாணை வெளியீடு