ஊட்டியில் இடியுடன் கன மழை

ஊட்டி, மே 22: ஊட்டியில் நேற்று மாலை பெய்த கன மழையால் மலர் கண்காட்சியை காண வந்த சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கள்ளாகியுள்ளனர்.  ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நிறைவு விழா நேற்று மாலை 4.30  மணிக்கு நடந்தது. அப்போது திடீரென கன மழையும் துவங்கியது. இந்த மழை சுமார்  அரை மணி நேரம் நீடித்தது. இதனால், பூங்காவின் பல்வேறு பகுதிகளிலும்  சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மரங்களின் அடியில் ஒதுங்கினர்.  

பெரிய புல் மைதானத்திற்குள் இருந்தவர்கள் அனைவரும் பூங்காவில்  அமைக்கப்பட்டிருந்த மேடைக்குள் தஞ்சமடைந்தனர். சிலர் கொட்டும் மழையிலும்  பூங்காவை கண்டு ரசித்தனர். பூங்கா நுழைவு வாயில் பகுதியில் தண்ணீர்  தேங்கியதால், அதனை கடந்துச் செல்ல சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர்.  மேலும், மழை பெய்த சமயத்தில் அனைவரும் பூங்காவை விட்டு ஒரே சமயத்தில்  வெளியேறினர். மேலும், தங்களது வாகனங்களை எடுத்துக் கொண்டு அறைகளை தேடியும்,  வெளியூர்களுக்கும் புறப்பட்டனர்.

இதனால், நகரில் கடும் போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டது. மேலும், இடைவிடாமல் பெய்த மழை காரணமாக நகரில் குளிர்  நிலவியது. அதேசமயம் மழை ஓய்ந்த பின் சுற்றுலா பயணிகள் மீண்டும் தாவரவியல்  பூங்காவை முற்றுகையிட துவங்கினர். இதனால், பூங்கா நுழைவு வாயில் பகுதியில்  நேற்று மாலை சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது.

புல்வெளிகளில் தண்ணீர்  தேங்கி நின்றதால், பூங்கா சேறும் சகதியுமாக மாறியது. மேலும், மழையின்  காரணமாக ஊட்டி ஏரியில் பாதுகாகப்பு கருதி சிறிது நேரம் படகு சவாரி  நிறுத்தப்பட்டது. பின் வழக்கம் போல், படகு சவாரி துவக்கப்பட்டது. நகரின்  முக்கிய சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றதால் வாகனங்களை  இயக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கடும்  அவதிக்குள்ளாகினர்.

நேற்று ஊட்டியில் அதிகபட்சமாக 21 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 13 டிகிரி செல்சியசாக பதிவாகியிருந்தது. சித்தூரம்மன் கோயில் கும்பாபிஷேகம் பாலக்காடு, மே 22: பாலக்காடு மாவட்டம் சித்தூரம்மன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 26ம் தேதி நடக்கிறது. தந்திரி ஜாதவேதன் தலைமையில் கும்பாபிஷேக விழா விசேஷ பூஜைகள் 19ம் தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து நேற்று மூன்றாம் நாள் உஷபூஜை, தகன ப்ரியத்கிஷணம், சதுர்திதாரா, பஞ்சகவ்யம், பதக்கம் ஆகிய கலசபூஜைகளும், தல் கலசாபிஷேகம், உச்சிக்கால பூஜை, சுகிர்தா ஹோமம், திலகஹோமம் ஆகியவை நடந்தது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலாமண்டலம் ஜான்சி, ஷனு குழுவினரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. கலாமண்டலம் ரவிக்குமார் குழுவினரின் துரியோதனவதம் என்ற தலைப்பில் கதகளி நாட்டியம்  நடந்தது. இன்று மாலை ஹோம பூஜை, பகவதி சேவை, ஸ்தல சுத்தி, விஷ்ணு சகஸ்ர ஜெபம், அத்தாழப்பூஜை நடக்கிறது. கலச மகா கும்பாபிஷேகம் மே 26ம் தேதி நடக்கிறது.

Related Stories: