பந்தலூர் அருகே குடியிருப்பில் யானை புகுந்தது மக்கள் பீதி

பந்தலூர், மே 22 : பந்தலூர் அருகே கூவமூலை ஆதிவாசி காலனியில் புகுந்த காட்டு யானையால் மக்கள் பீதியடைந்தனர். பந்தலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் காட்டுயானைகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.  தற்போது இப்பகுதியில் பலாப்பழம் சீசன் துவங்கியுள்ளதால் யானைகளின் வருகை அதிகரித்து வருகிது.

நேற்று முன்தினம் கூவமூலை ஆதிவாசி காலனியில் காட்டு யானை ஒன்று நுழைந்ததால் ஆதிவாசி மக்கள் அச்சமடைந்து, யானையை சத்தமிட்டும், தகரங்களை தட்டியும் விரட்டினர். ஆனால் யானை செல்லமால் அங்ேகயே உலாவியது. பின் அப்பகுதிமக்கள் சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தேவாலா வனகாப்பாளர் லூயிஸ் மற்றும் வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: