×

ஓமலூர் வட்டாரத்தில் கோடை தாக்கத்தால் தீவன தட்டுப்பாடு

ஓமலூர், மே 22: ஓமலூர் வட்டாரத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால், கால்நடைகளுக்கான தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஓமலூர் ஒருங்கிணைந்த வட்டாரத்தில் கோடையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீரின்றி வற்றிய நிலையில் உள்ளது.  விவசாயமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கான தீவன தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. தீவன பற்றாக்குறையால், பால் உற்பத்தியும் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் விவசாயகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேய்ச்சலுக்கு விடப்படும் கால்நடைகள், வெப்ப தாக்குதலால் விரைவில் சோர்வடைந்து விடுகின்றன. மேலும், பசுந்தீவனத்தின் விலையும் உயர்ந்துள்ளதால், விவசாயிகள் அவற்றை வாங்க முடியவில்லை. எனவே, மானிய விலையில் கால்நடைகளுக்கான தீவனத்தை வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : region ,Omalur ,
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!