ஓமலூரில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி

ஓமலூர், மே 22: மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் ஓமலூர் வட்ட அணி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றது. தமிழ்நாடு கிக் பாக்ஸிங் சங்கத்தின் சார்பில், ஓமலூரில் சேலம் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. இதில் சேலம், ஓமலூர், இடைப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி, காடையாம்பட்டி ஆகிய வட்டங்களில் இருந்து 150க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடினர். இதில், சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவுகளில் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் கலந்து கொண்டன. 2 நாட்கள் நடைபெற்ற போட்டியில், ஒட்டுமொத்த சேம்பியனாக ஓமலூர் வட்ட அணி முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றது. ஆடவர் பிரிவில் ஓமலூர் வட்ட அணியும், பெண்கள் பிரிவில் காடையாம்பட்டி அணியும் முதலிடத்தை பிடித்தன. மேலும், இதில் ஆடவர் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட 3 பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. தமிழ்நாடு கிக் பாக்ஸிங் அசோசியேஷன், சேலம் மாவட்ட தலைவர் சசிகுமார் வரவேற்றார். அமுதா, மேகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில கமிட்டி உறுப்பினர்கள் செந்தில்ராஜன், சிவமகேந்திரன், ஏசியன்ட் சோட்டாகான் டெக்னிகல் இயக்குனர் செல்வகுமார், கிக் பாக்ஸிங் அசோசியேஷன் பொதுச்செயலாளர் சிவபெருமாள் ஆகியோர் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மாவட்ட பொருளாளர் அருண்குமார் நன்றி கூறினார்.

Related Stories: