ஏற்காடு சேர்வராயன் கோயில் தேரோட்டம்

ஏற்காடு, மே 22: ஏற்காட்டில் சேர்வராயன் கோயில் தேர் திருவிழா நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்த கொண்டனர். ஏற்காட்டில் பிரசித்தி பெற்ற சேர்வராயன் குகை கோயில் வைகாசி விசாக தேர் திருவிழா வெகு விமர்சையாக ேநற்று நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில், சேர்வராயன்- காவிரியம்மன் சுவாமி சிலை வைக்கப்பட்டு தேர் வடம் பிடித்து கோயிலை சுற்றி இழுக்கப்பட்டது. இதில், ஏற்காடு தொகுதி எம்எல்ஏ சித்ரா மற்றும் ஏற்காடு யூனியன் முன்னாள் சேர்மேன் அன்னாதுரை ஆகியோர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர். தேரோட்டத்தின் போது, சூரை தேங்காய்கள், சில்லரை காசுகள், காபி கொட்டைகள், மிளகு, கல் உப்பு ஆகியவற்றை பக்தர்கள் வாரி இறைத்தனர். விழாவில்  ஏற்காட்டில் உள்ள 67 கிராம மக்கள் மற்றும் சேலம், தர்மபுரி பகுதியைச் சேர்ந்த 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களின் வருகையையொட்டி சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது.

Related Stories: