கூட்டுறவு சங்கத்தில் 350 மூட்டை கொப்பரை ₹14 லட்சத்திற்கு ஏலம் ஜலகண்டாபுரம், மே 22:

ஜலகண்டாபுரத்தில் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க ஜலகண்டாபுரம் கிளை சேவை மையத்தில் நேற்று ஏலம் நடந்தது. இதில், ஜலகண்டாபுரம், இடப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி, மேட்டூர், கொளத்தூர், நங்கவள்ளி மற்றும் தர்மபுரி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 350 மூட்டை கொப்பரைகளை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். கொப்பரைகள் தரத்திற்கு தகுந்தாற்போல் முதல் தரம் குறைந்த பட்சமாக, கிலோ ₹77.30 காசுகள் முதல் அதிக பட்சமாக ₹90.75 காசுகள் வரையும், 2ம் தரம் குறைந்த பட்சமாக கிலோ ₹52 முதல் அதிக பட்சமாக ₹63.75 காசுகள் வரையிலும் ஏலம் போனது. இதில் மொத்தம் 350 மூட்டை கொப்பரை, ₹14 லட்சத்திற்கு ஏலம் போனது.

Related Stories: