காடையாம்பட்டி பகுதியில் அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறையால் நிலத்தடி நீர் பாதிப்பு

காடையாம்பட்டி, மே 22: காடையாம்பட்டி பகுதியில் அனுமதியின்றி செயல்படும், சாயப்பட்டறைகளால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு சிகப்பு நிரத்தில் மாறியுள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். காடையாம்பட்டி அருகே செம்மாண்டப்பட்டி ஊராட்சியில், சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பிரதானமான தொழிலாக, பட்டு சேலை உற்பத்தி செய்து வருகின்றனர். இந்நிலையில் பட்டு சேலைகளுக்கு கலர் கட்டுவதற்காக, சுமார் 23 சாயப்பட்டறைகள் இப்பகுதியில் அனுமதியில்லாமல் செயல்பட்டு வருகிறது. இதில், சேகரமாகும் கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல், ேநரடியாக அப்பகுதியில் உள்ள கிணற்றில் விடுகின்றனர். இதனால், அப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, சிவப்பு நிறத்தில் தண்ணீர் மாறியுள்ளது.

வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணற்று நீர் பாதிக்கப்பட்டு சிவப்பு நிறத்தில் மாறியுள்ளது. மேலும், அந்த பகுதியில் உள்ள விவசாய கிணறகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தினால், உடலில் அரிப்பு, சொரி, சிரங்கு உள்ளிட்ட தொற்றுநோய் ஏற்பட்டு வருவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, இப்பகுதியில் அனுமதியின்றி செயல்படும், சாயப்பட்டறைகளை அகற்றவும், சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: