கருப்பூர் இன்ஜினியரிங் கல்லூரியில் நாளை வாக்கு எண்ணிக்ைக பாதுகாப்பு பணியில் 1000 போலீசார்

சேலம், மே 22: சேலம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை, கருப்பூர் இன்ஜினியரிங் கல்லூரியில்  நாளை (23ம்தேதி) நடக்கிறது. இதையொட்டி ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.  

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 18ம் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை நாளை காலை தொடங்குகிறது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம், கருப்பூரில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, ஓமலூர், இடைப்பாடி மற்றும் வீரபாண்டி என 6 சட்டமன்ற தொகுதிக்குமான, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்கு எண்ணிக்ைகக்கான முன்னேற்பாட்டு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, வாக்கு எண்ணிக்கை அறையில் இரும்பு வலைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுவிட்டன. ஒரு சுற்றுக்கு 14 டேபிள் அடிப்படையில் வாக்குகள் எண்ணப்படுகிறது. இதில், குறைந்த வாக்குச்சாவடிகள் (268) கொண்ட சேலம் வடக்கு தொகுதிக்கு 20 சுற்றுகள் எண்ணப்படும். அதேசமயம் அதிக வாக்குச்சாவடிகள் கொண்ட (345) ஓமலூர் தொகுதிக்கு 25 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகிறது. எனவே சேலம் தொகுதிக்கான இறுதி நிலவரம் 25வது சுற்றுக்கு பிறகே, அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிடப்படவுள்ளது.

தற்போது, ஒவ்வொரு தொகுதிக்குமான டேபிள்கள் ஏற்பாடு ெசய்யப்பட்டுள்ளது. ஒரு முதன்மை வாக்கு எண்ணிக்கை முகவர், 14 வாக்கு எண்ணிக்கை முகவர் மற்றும் ஒரு தபால் வாக்கு எண்ணிக்கை முகவர் என, ஒரு வேட்பாளர், ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 16 பேர் என்ற அடிப்படையில், 96 பேரை முகவர்களாக நியமித்துக் கொள்ளலாம். இவர்களுக்கான விதிமுறைகள் தெரியப்படுத்தப்பட்டுள்ளதோடு, தனி அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பிற்கென பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தவிர, தொண்டர்களை கட்டுப்படுத்த வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு உள்ளும், வெளியிலும் தடுப்பு கட்ைடகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு மையத்திலிருந்து அறிவிப்புகளை வெளியிட, ஒலிபெருக்கிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், ஊடக மையமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேலம் தொகுதி வாக்கு எண்ணும் மையமான கருப்பூர் இன்ஜினியரிங் கல்லூரி, போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில், துணை கமிஷனர்கள் தங்கதுரை, சியாமளா தேவி ஆகியோரது கண்காணிப்பில், 12 உதவி கமிஷனர்கள், 20 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்ஐக்கள் போலீசார் என 950 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதுதவிர போச்சம்பள்ளி பட்டாலியனில் இருந்து ஒரு கம்பனி போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் முகவர்கள் பலத்த சோதனைக்கு பிறகே உள்ள அனுமதிக்கப்படவுள்ளனர். இதற்கென நுழைவு வாயில் உள்ள 6 இடங்களிலும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கான மையத்தின் முகப்பில் 6 இடத்திலும் என மொத்தம் 12 இடங்களில் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதனை நடத்தப்படவுள்ளது.

Related Stories: