துவக்க பள்ளி அருகே திறந்தவெளி கிணறால் ஆபத்து

உடுமலை, மே 22: உடுமலை அருகே மெட்ராத்தி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து, சுமார் 250 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளியின் அருகே சுமார் 60 அடி ஆழ திறந்தவெளி கிணறு உள்ளது. வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு உள்ளதால், இந்த கிணறை பொதுமக்கள் தற்போது பயன்படுத்துவது இல்லை.

 தற்போது பள்ளி குழந்தைகள் இந்த கிணறு அருகே விளையாடுகின்றனர். கவனக்குறைவால், பள்ளி குழந்தைகள் கிணற்றில் தவறி விழும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, பள்ளி அருகே உள்ள திறந்தவெளி கிணறுகளுக்கு மூடி போட வேண்டும் என ஒன்றிய நிர்வாகங்களுக்கு அரசு அறிவுறுத்தி இருந்தது. ஆனால் இங்கு மூடி போடப்படவில்லை. இதனால் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். உடனடியாக கிணறுக்கு மூடி போட்டு, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: