ராஜிவ்காந்தி நினைவு தினம் காங்கிரஸ் கட்சியினர் அமைதி பேரணி

ஈரோடு, மே 22: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் நினைவு நாளையொட்டி நேற்று ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அமைதி பேரணி நடந்தது, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் நினைவு தினத்தையொட்டி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் அமைதி பேரணி நடந்தது.

 ஈரோடு மூலப்பட்டறையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தொடங்கிய அமைதி பேரணிக்கு மாநகர் மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார். இந்த பேரணியில் மேலிட பார்வையாளர் வீனஸ் மணி, மண்டல தலைவர்கள் அம்புலி, விவேகானந்தன், திருச்செல்வம், ஜாபர்சாதிக், முன்னாள் மண்டல தலைவர் ராஜேந்திரன், மாரியப்பன், காமராஜ்பூபதி, பழனிவேல், விவசாய பிரிவு பெரியசாமி, மகிளா காங்கிரஸ் புவனேஸ்வரி, சிறுபான்மை பிரிவு பாட்சா, வழக்கறிஞர் பிரிவு பாஸ்கர்ராஜ் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

முன்னதாக ஈரோடு மாநகராட்சி 45வது வார்டு புதுமை காலனியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  இந்த நிகழ்ச்சிக்கு வார்டு தலைவர் இப்ராகிம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிராஜூதீன் மாலை அணிவித்தார். இதில் துணை தலைவர் ஆசிக் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

பெருந்துறை: ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜிவ்காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு பெருந்துறையில் அமைதி பேரணி நடந்தது. பேரணியை கோவை முன்னாள் மேயர் காலனி வெங்கடாசலம் துவக்கி வைத்தார். பேரணிக்கு ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மக்கள் ராஜன் தலைமை வகித்தார். பேரணி பெருந்துறை அண்ணாசிலை அருகே துவங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. அங்கு ஊர்வலத்தில் பங்கேற்ற தொண்டர்கள் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தனர். இப்பேரணியில் திமுக,கொமதேக, வி. சி. க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

Related Stories: