×

எரிச்சநத்தம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய கழிவுநீரால் சுகாதாரக்கேடு

விருதுநகர், மே 22: எரிச்சநத்தம் ஊராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் அருகே எரிச்சநத்தம் ஊராட்சியில் குமிழங்குளம், முருகனேரி, நடையனேரி, எரிச்சந்தம் கிராமங்கள் உள்ளன. கிராமங்களுக்கான அடிப்படை வசதியின்றி மக்கள் சிரமத்தில் உள்ளனர். நடையனேரி கிராம குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மழைநீர் வரத்து ஓடை வழியாக சென்று எரிச்சநத்தம் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் தேங்கி நிற்கிறது.

பாசிபடர்ந்து தேங்கி கிடக்கும் கழிவுநீரில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டி கிடப்பதால் கொசுக்களும், துர்நாற்றமும் வீசுகிறது. கழிவுநீர் தேங்கி நிற்கும் ஓடையின் மேற்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் நரகத்தில் இருப்பது போன்ற உணர்வில் வசித்து வருகின்றனர். கழிவுநீர் ஓடையின் மேற்பகுதியில் உள்ள 6 அடி ரோட்டில் சிறுவர்கள் விளையாடுவதும், கழிவுநீர் தவறி விழுவதும் வாடிக்கையான நிகழ்வாக மாறி வருகிறது. ஊராட்சி நிர்வாகம் ஓடையை தூர்வாரி, கழிவுநீர் ஓடையில் கலக்காத வகையில் வாறுகால் கட்டி கழிவுநீரை கடத்த ஏற்பாடுகள் செய்ய ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : area ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...