×

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் சொட்டுநீர் பாசனத்தில் மரவள்ளி சாகுபடி

பாப்பிரெட்டிப்பட்டி, மே 22: பாப்பிரெட்டிபட்டி பகுதியில் சொட்டுநீர் பாசனத்தில் விவசாயிகள் மரவள்ளி சாகுபடி பணியை முடுக்கி விட்டுள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட வெங்கடசமுத்திரம், மோளையானூர், மெணசி, பள்ளிப்பட்டி பையர்நத்தம், துறிஞ்சிப்பட்டி, கோபிசெட்டிப்பாளையம், தென்கரைக்கோட்டை, மருக்காலம்பட்டி, ராமியம்பட்டி, குருபரஹள்ளி, ஜாலியூர் ஆகிய கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் சொட்டுநீர் பாசனம் மூலம் மரவள்ளி நடவு செய்யப்பட்டு, தற்போது செழுமையாக வளர்ந்துள்ளன. மாவட்டத்தில் நிலவும் வறட்சியிலும் ஆங்காங்கே ஆழ்துளை கிணறுகள் அமைத்து, விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் மூலம் மரவள்ளிச் செடிகளை நடவு செய்துள்ளனர். சொட்டுநீர் பாசனத்தை ஊக்குவிக்கும் வகையில் அரசு சார்பில், சிறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி சிறு, குறு விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் மூலம் மரவள்ளி நடவு செய்து அதனை பராமரித்து வருகிறார்கள்.

Tags : area ,Pappirippatti ,
× RELATED வாட்டி வதைக்கும்...