×

அரூர் கூட்டு பண்ணைகளில் வேளாண் இயந்திரங்கள் ஆய்வு

அரூர், மே 22: அரூர் வேளாண்துறை கூட்டு பண்ணை குழுக்களில் இயந்திரங்கள், இருப்பு பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டது. அரூர் வேளாண்மைத்துறை கூட்டு பண்ணை பயிர் திட்டத்தில், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள ஜம்மணஅள்ளி, தாமலேரிப்பட்டி, வடுகப்பட்டி, தண்டகுப்பம், மொண்டுகுழி ஆகிய கிராமங்களில், தர்மபுரி உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநர் கைலாசபதி தலைமையில் வேளாண் இயந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது, உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களின் தீர்மான பதிவேடு, இருப்பு பதிவேடு, பணப்பதிவேடு, குத்தகை பதிவேடு, கடன் பேரேடு, சேமிப்பு பதிவேடு, வேளாண் இயந்திரங்கள் ஒப்பந்த நகல், பட்டியல் நகல் உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்விற்கு பின்பு, உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டாக கலந்து பேசி ஒரே நேரத்தில், ஒரே மாதிரியான பயிர் செய்வதன் மூலம் உற்பத்தி செலவை குறைக்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டது. ஆய்வின்போது வேளாண்மை அலுவலர்கள் சுதா, இளவரசி, வேளாண் உதவி இயக்குநர் மோகன் சகாயராஜ், துணை வேளாண் அலுவலர் செந்தில்முருகன், அட்மா திட்ட பணியாளர்கள் செந்தில்குமார், வீரதளபதி, திருப்பதி, வேளாண் உதவி அலுவலர்கள் ரமேஷ், ஜெயக்குமார், சுரேஷ், சிவன், ரங்கநாதன் ஆகியோர் உடவிருந்தனர்.

Tags : joint farms ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா