×

மழை பெய்தால் சாய்ந்துவிடும் கம்பம் நெடுஞ்சாலையில் மிரட்டும் மின்கம்பம் சரி செய்ய மக்கள் வலியுறுத்தல்

கம்பம். மே. 22:  கம்பம் கூடலூர்  தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரத்தில் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை, விபத்து ஏற்படுவதற்கு முன் மாற்ற மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கம்பம் கூடலூர் நெடுஞ்சாலையில் இருபுறமும் உள்ள மின்கம்பங்களிலிருந்து அப்பகுதிகளிலுள்ள உள்ள வீடுகள், கடைகள், ஒர்க்ஷாப், ஓட்டல் போன்றவற்றிற்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தனியார் திருமண மண்டபம் எதிரே சாலையோரத்தில் உள்ள சிமெண்ட் கான்கிரீட்டால் ஆன மின்கம்பம் ஒன்று, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழை மற்றும் காற்றினால் ஒருபுறமாக சாய்ந்துள்ளது.

மின் வயர்களின் இழுவையின் காரணமாக கீழே விழாமல் அதிர்ஷ்டவசமாக நிற்கிறது. எந்த நேரத்திலும் சாயும் அபாயம் உள்ளது. இம்மின்கம்பத்தை மாற்றக்கோரி இப்பகுதி மக்கள் மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் இதுவரை சரிசெய்யவில்லை. அடுத்து ஒரு பலமான மழையோ, காற்றோ அடித்தால் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள இந்த மின்கம்பம் ஒடிந்து விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே விபத்து நடந்த பின்பு நடவடிக்கை எடுப்பதைவிட, பழுதடைந்த  நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற மின்வாரியத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கஞ்சாவுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது