பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா திருச்சி மாநகரில் நாளை போக்குவரத்தில் மாற்றம்மாநகர கமிஷனர் அறிவிப்பு

திருச்சி, மே 22:  பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா வரும் 23ம் தேதி (நாளை) கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து திருச்சியிலுள்ள அவரின் உருவ சிலைக்கு மாவட்ட நிர்வாகம், அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். இதற்காக மாநகர போலீஸ் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் அவ்வழியே செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 அதன்படி, திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஒத்தக்கடை வழியாக சென்ைன, சேலம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் மதுரை செல்லும் புறநகர் பஸ்கள் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பெரியார் சிலை, கலையரங்கம் ரோடு, ஆர்.சி பள்ளி சாலை சந்திப்பு, தலைமை தபால் நிலையம், டிவிஎஸ் டோல்கேட் வழியே செல்ல வேண்டும். சென்னை, சேலம், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கத்தில் இருந்து மத்திய பஸ் நிலையம் வரும் பஸ்கள் டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம், விராலிமலை ரோடு ஜங்ஷன், அரிஸ்டோ, கோரிமேடு, மிளகுபாறை வழியே மத்திய பஸ் நிலையம் வரவேண்டும். கரூர் மார்க்கத்தில் இருந்து மத்திய பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள் கே.டி ஜங்ஷன், சாஸ்திரி ரோடு, அண்ணாநகர் புதிய சாலை, எம்ஜிஆர் சிலை, நீதிமன்ற சாலை, கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையம், வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா, சங்கம் ஓட்டல், மிளகுபாறை வழியே செல்ல வேண்டும்.

 மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கரூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் வெஸ்ட்ரி ரவுண்டானா, எம்ஜிஆர் சிலை, அண்ணாநகர் புதிய சாலை, சாஸ்திரி ரோடு, கே.டி ஜங்ஷன் வழியே செல்ல வேண்டும். மத்திய பஸ்நிலையத்தில் இருந்து அமெரிக்கன் மருத்துவமனை வழியே சத்திரம் பஸ் நிலையம் செல்லும் நகர பஸ்கள் குரு ஓட்டல் சந்திப்பில் இருந்து வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா, அய்யப்பன் கோயில் சாலை, எம்ஜிஆர் சிலை வழியே செல்ல வேண்டும். சத்திரம் பஸ்நிலையத்தில் இருந்து அெமரிக்கன் மருத்துவமனை வழியே மத்திய பஸ்நிைலயத்திற்கு வரும் நகர பஸ்கள் எம்ஜிஆர் சிலை, நீதிமன்ற சாலை, கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையம், வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா, சங்கம் ஓட்டல், மிளகுபாறை வழியே செல்ல வேண்டும். இந்த தகவலை திருச்சி மாநகர கமிஷனர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

× RELATED குடிநீர், தெருவிளக்கு, கழிப்பறை ‘அவுட்’ கருணாநிதி பிறந்த நாள் விழா