மத்திய அமைச்சர் நிதியிலிருந்து விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி, மே 22: மத்திய பாதுகாப்பு அமைச்சரின் நிதியிலிருந்து முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு 2019-20ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க திருச்சி கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து திருச்சி கலெக்டர் சிவராசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தகுதிகள் மற்றும் நிபந்தனைகளாக, 1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள இரு குழந்தைகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம். சம்மந்தப்பட்ட குழந்தையின் பெயர் பார்ட்-2 ஆர்டரில் அல்லது குடும்ப உறுப்பினர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். www.ksb.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பித்திட இயலும். ஜேசிஓ மற்றும் அதற்கும் மேலான தரத்தினர் இதன்கீழ் விண்ணப்பிக்க இயலாது.

விண்ணப்பம் கேஎஸ்பிக்கு ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை 30-9-2019க்குள்ளும் மற்றும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு 30.10.2019க்குள்ளும் அனுப்ப வேண்டும் என்பதால் குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட நிபந்தனைகளுக்கேற்ப முழுமையான விவரங்கள்/சான்றுகள் இல்லாத மற்றும் குறிப்பிட்ட தேதிக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிந்துரைக்க இயலாது. இது தொடர்பான விவரங்களை, திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Union Minister ,
× RELATED நிதியமைச்சகம் தகவல் 81,700 கோடி கடன் 9 நாளில் விநியோகம்