மணம் முடிக்க மனமில்லை வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி, மே 22:  திருச்சி உய்யகொண்டான்திருமலை ரெங்கா நகரை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சத்தியசீலன்(28). இவர் தந்தையின் எண்ணெய் கடையை நிர்வகித்து வந்தார். இந்நிலையில் சுப்ரமணியன், மகனின் திருமணத்திற்காக பல்வேறு இடங்களில் மணப்பெண் தேடி வந்தார். ஆனால், திருமணத்திற்கு சத்தியசீலன் சம்மதம் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். ஆனாலும் பெற்றோர் கண்டிப்புடன் பெண் பார்க்கும் படலத்தில் ஈடுபட்டதில் மனமுடைந்த சத்தியசீலன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிந்து திருமணம் பிடிக்காததால் தற்ெகாலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED அணைக்கட்டு அடுத்த நாராயணபுரத்தில் சிறுவனுக்கு டெங்கு பாதிப்பு