பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

லால்குடி, மே 22:  லால்குடியை அடுத்த  கல்லக்குடி பேரூராட்சி பகுதியில்  செயல் அலுவலர்  பாலமுருகன் மற்றும் ஊழியர்கள் பெட்டிக்கடை, மளிகைக்கடை, பூக்கடை, இறைச்சி  கடைகள், மருந்து கடைகள், ஜவுளிக்கடைகள் மற்றும் இதர வணிக வளாங்களில் தமிழக  அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை தடுக்கும்  வகையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடைகளில் விற்பனைக்கு வைத்துள்ள  பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், கேரி பைகள் உள்ளிட்ட பொருட்களை  பறிமுதல் செய்து உபயோகம் செய்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து  எச்சரித்தனர். மேலும் பேரூராட்சி பகுதியில் குடிநீர்  குழாயில் மின் மோட்டார் மற்றும் கைப்பம்பு மூலம் குடிநீரை உறிஞ்சி எடுப்பதை  தடை செய்ய அனைத்து வீடுகளிலும் கடைகளிலும் சோதனை செய்தனர்.

Tags :
× RELATED காலாவதியான பொருட்கள் பறிமுதல்