பணம் கட்டி ஏமாற்றமடைந்தோர் உரிய ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம் பொருளாதார குற்றப்பிரிவு அழைப்பு

திருச்சி, மே 22:  தஞ்சையிலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தோர் உரிய ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம் என திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் மெயின் ரோட்டில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்த பழனியப்பன் தந்தை பழ.தேவேந்திரன் பல வருடங்களாக சிறு சேமிப்பு திட்டம், ஏல சீட்டு, முதலீடு திட்டம் மற்றும் தங்க நகை திட்டம் என்ற பெயரில் அதிக லாபம் கிடைக்கும் என்று பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். மேலும் சீட்டு தொகை மற்றும் முதலீட்டிற்கான முதிர்வு காலம் முடிந்தவுடன் தொகையினை திருப்பி தராமல் சுமார் 2.5 கோடி பணத்தை 272 நபர்களுக்கு திருப்பி தராமல் ஏமாற்றிவிட்டு நிதி நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டதாக, தஞ்சை மாவட்டம், சாலியமங்கலத்தை சேர்ந்த ராஜாராம் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு விசாரணையில் உள்ளது. எனவே திருச்சி மாநகரம், மாவட்டம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு மற்றும் ஏலச்சீட்டுகளில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சம்பந்தபட்ட அசல் ஆவணங்களுடன் நேரில் வந்து புகார் அளிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 0431-2422220 மற்றும் 9498105856 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Fraudsters ,crimes ,
× RELATED அரூரில் குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்த கோரிக்கை