டாஸ்மாக் கடை முன் நிறுத்தியிருந்த ஆட்டோ மாயம்

திருச்சி, மே 22:  திருச்சி பாலக்கரை படையாச்சி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(46), ஆட்டோ டிரைவர். இவர் சொந்தமாக ஆட்ேடா வைத்து ஓட்டி வருகிறார். இதில் நேற்று முன்தினம் திருவானைக்கோவல் அருகே உள்ள டாஸ்மாக் கடை எதிரே ஆட்டோவை நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது நிறுத்தி இருந்த ஆட்டோவை காணாதது கண்டு திடுக்கிட்டார். அக்கம்பக்கம் தேடியும் ஆட்டோவை காணவில்லை. இதுகுறித்து ரங்கம் குற்றப்பிரிவு போலீசில் மணிகண்டன் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான ஆட்டோவை தேடி வருகின்றனர்.

Tags : shop ,
× RELATED டாஸ்மாக் கடைகளின் எதிரே தரமற்ற உணவு பொருள் விற்பனை