நுகர்வோர் மற்றும் சேவை சங்க கூட்டமைப்பு சார்பில் சிறந்த சேவை புரிந்த 28 அரசு ஊழியர்களுக்கு விருது வழங்கல்

திருச்சி, மே 22:  திருச்சியில் நுகர்வோர் மற்றும் சேவை சங்க கூட்டமைப்பு சார்பில் சிறந்த சேவை புரிந்த 28 அரசு ஊழியர்களை பாராட்டி விருது வழங்கப்பட்டது. திருச்சியில் நுகர்வோர் மற்றும் சேவை சங்க கூட்டமைப்பு சார்பில் 10ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சிறந்த சேவை புரிந்த அரசுத்துறை ஊழியர்களுக்கு பாராட்டு விழாவும் நடந்தது. தலைவர் சேகரன் தலைமை வகித்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். இதில் சென்னையை சேர்ந்த  வெங்கடேசன், மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு  சிறப்பு பாணியாற்றி மக்கள் சேவை புரிந்ததாக மின், போக்குவரத்து,   காவல்துறை மற்றும் பல்வேறு அரசு துறையை  சேர்ந்த 28 அரசு ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கினர்.   மின்வாரிய நிர்வாக பொறியாளர் சிவலிங்கம், உழவர் சந்தை  காப்பாளர் சமீம், போக்குவரத்து காவலர் அனிசா, உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம், அரியமங்கலம் கூட்டுறவு சங்க செயலர் ராஜ்குமார் ஆகியோர் பேசினர்.   துணைத் தலைவர் செல்வராஜ் வரவேற்றார். செயலாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: