ராஜிவ்காந்தி நினைவு நாளையொட்டி கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

திருச்சி, மே 22:  முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நினைவு நாளையொட்டி கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி டிஆர்ஓ தலைமையில் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் நேற்று ஏற்றனர். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நினைவு நாளையொட்டி திருச்சி கலெக்டர் அலு வலக வளாகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. டிஆர்ஓ சாந்தி தலைமை வகித்து உறுதிமொழியை வாசிக்க தொடர்ந்து அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழியை திரும்ப சொல்லி கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவருத்ரய்யா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் பழனிதேவி, அலுவலக மேலாளர் (குற்றவியல்) ஷோபா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்ேகற்று உறுதிமொழி ஏற்றனர். இதேபோல திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நகரப்பொறியாளர் அமுதவள்ளி தலைமையில் நேற்று கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அரியமங்கலம், பொன்மலை மற்றும் கோ-அபிசேகபுரம் கோட்டங்களில் உதவி ஆணையர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: