முற்றுபெறாத ஜங்ஷன் ஆக்டோபஸ் பாலத்தில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் வாக்கிங்

ஜாக்கிங், உடற்பயிற்சிதிருச்சி, மே 22:   ராணுவ நிலம் தருவதில் இழுபறியால் திருச்சி ஜங்ஷன் ரவுண்டானாவிலிருந்து மன்னார்புரம் இணைப்புச் சாலை ரவுண்டான பாலம் பணிகள் பாதியில் நிற்கின்றன. இப்பாலத்தில் தடுப்பு சுவரை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். ஆபத்தை உணராமல் மக்கள் வாக்கிங் செய்வதும், காலையில் உடல் பயிற்சி மேற்கொள்ளவும் இப்பகுதியை பயன்படுத்தி வருகின்றனர். திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே ஆக்டோபஸ் ரவுண்டானா பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் பணி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. ராணுவ நிலம் தராததால் ஜங்ஷனிலிருந்து மன்னார்புரம் இணைப்புச்சாலையை இணைக்கும் பாலம் பணி பாதியில் நிற்கிறது. இதனால் அப்பகுதியை யாரும் கடகக்கூடாது என்பதற்காக பணி முற்று பெறாத பாலத்தின் குறுக்கே தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தடுப்புச்சுவரை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். மேலும் இரவு நேரத்தில் குடிமகன்கள் பாராக மாற்றி உள்ளனர். காலை நேரங்களில் வாக்கிங், ஜாக்கிங் செல்கின்றனர். உடற்பயிற்சி, யோகா செய்கின்றனர். ஆபத்தை உணராமல் மக்கள் இப்பகுதியில் செல்கின்றனர். எனவே அசம்பாவிதம்நேரும் முன்னர் நெடுஞ்சாலைத்துறையினர் அப்பகுதியில் உடைக்கப்பட்ட சுவரை மீண்டும் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தவிர பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertising
Advertising

Related Stories: