×

பிசானத்தூர் திரவுபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

கந்தர்வகோட்டை.மே22: கந்தர்வகோட்டை அருகே பிசானத்தூரில் தீமிதி விழாவில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிப்பட்டனர். கந்தர்வகோட்டை அருகே பிசானத்தூர் திரவுபதி அம்மன் கோயில் வைகாசி திருவிழாவை  முன்னிட்டு தீமிதி விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு  நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டனர். கந்தர்வகோட்டை அருகே பிசானத்தூரில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா 10 நாட்கள் நடைபெற்று வருகின்றன. 7ம் நாள் நிகழ்வாக கோவில் முன்பாக திடலில் தீமிதி விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை 5.30 மணியளவில் விரதம் மேற்க்கொண்ட 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக் கொண்டு தீமிதித்தனர். இதை காண மட்டங்கால், துருசுபட்டி, பழைய கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 3ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டு வழிபட்டனர். தீமிதி விழாவை முன்னிட்டு கந்தர்வகோட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Tags : festival ,Tirupati devi ,temple ,
× RELATED மதுரை மீனாட்சியம்மன் கோயில்...