×

திறந்தவெளி பாரான பாலகிருஷ்ணாபுரம் கண்மாய்

திண்டுக்கல், மே 22: திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் கண்மாய் விளையாட்டு மைதானம் இரவுநேரங்களில் திறந்தவெளி பாராக செயல்பட்டு வருகிறது. இங்கு உடைக்கப்படும் மதுபாட்டில்கள் பயிற்சி மேற்கொள்பவர்களின் பாதங்களை பதம் பார்த்து வருகின்றன. திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் கண்மாயின் ஒரு பகுதியை விளையாட்டு மைதானமாக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் காலை, மாலையில்நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.  

மேலும் போலீஸ் தேர்விற்கு பயிற்சி பெறும் இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள்  பயிற்சி பெறுகின்றனர். மைதானம் திறந்தவெளியாக இருப்பதால் இரவுநேரத்தில் இது சமூகவிரோதிகளுக்கு வசதியாக போய்விடுகிறது. தினமும் இரவு மைதானத்தை அறிவிக்கப்படாத பாராக பயன்படுத்தி வருகின்றனர். மது குடிப்பவர்கள் தாங்கள் அருந்திய பாட்டில்களை மைதானத்தில் ஆங்காங்கு வீசி செல்கின்றனர்.

சிலர் போதை தலைக்கேறியதும் உடைத்து விட்டும் செல்கின்றனர். இது அதிகாலை நடைபயிற்சி மேற்கொள்பவர்கள், விளையாட்டு வீரர்களின் பாதங்களை பதம் பார்க்கிறது. குடிமகன்கள் தாங்கள் உண்ட சிக்கன் உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை வீசி செல்கின்றனர். இதனால் மைதானமே கடும் துர்நாற்றம் வீசுகிறது. சிலர் மைதானத்தில் மாடுகளை மேய்க்க விடுகின்றனர்.

அவற்றின் சாணி விளையாட்டு வீரர்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. சில சமயம் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு வரை ஏற்பட்டு வருகிறது. இதேபோல் மைதானம் அருகில் கண்மாய் கரை ஒட்டியுள்ள கோயில் மைதானத்மையும் அறிவிக்கப்படாத பாராத பயன்படுத்துகின்றனர். இதனால் தரிசனம் செய்ய வருபவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து பாலகிருஷ்ணாபுரம் விளையாட்டு மைதானத்தை பராமரிக்கும் காட்டுராஜா, போலீஸ் பயிற்சி அளிக்கும் ராமநாதன் ஆகியோர் கூறியதாவது: ‘மைதானத்தை சுற்றி கேட் இல்லாததால் சமூகவிரோதிகள் இங்கு முகாமிட்டு பல தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் குடிமகன்கள் அறிவிக்கப்படாத பாராக பயன்படுத்துகின்றனர்.

கண்மாய் கரையை ஒட்டிய கோயில் மைதானத்தில் புனிதமாக கருதப்படுகிறது. அங்கு பெண்கள் பொங்கலிட்டு, சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஆனால் அங்கும் மது பாட்டில்களை உடைத்து, சிலர் தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த அவலத்தை போக்க இரவுநேரங்களில் போலீசார் ரோந்து வர வேண்டும். மேலும் மாடுகளை மைதானத்தில் மேய்ப்பதால் சாணம் இடுகின்றன.

இதனால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். நாங்கள் மணல், செம்மண் அடித்து ஓடு தளம் அமைத்துள்ளோம். இதில் சிலர் டூவீலர் பழகு தளமாக பயன்படுத்துகின்றனர். இதனால் ஓடுதளம் பாதிக்கப்படுகிறது. நாங்கள் தொடர்ந்து செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மைதானத்தை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’
என்றனர்.

பாதங்களை பதம் பார்க்கும் பாட்டில்: வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
மருத்துவ குணங்கள் கொண்டது நீண்டநாள் கோரிக்கையை ஏற்று வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையை ஒட்டியுள்ள  மருத்துவர் குடியிருப்பு பகுதியில் பிரேத பரிசோதனை அறையை மாற்றி அமைக்கும்  பணி துவங்கினர். ஆனால் அந்த இடத்தில் பிரேத பரிசோதனை அறை அமைத்தால்  போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவே அத்திட்டம்  பாதியில் நின்று போனது. தொடர்ந்து பிரேத பரிசோதனை அறை மயானத்திலே இருந்து  வருவதால் இறந்தவர்களை காண முடியாமல் பெண்கள் பரிதவித்து வருகின்றனர்.

Tags : Balakrishnapuram ,
× RELATED திண்டுக்கல் கோவிந்தராஜ் நகரில்...