அரசு கல்லூரிகளில் பணிமூப்பின் அடிப்படையில் முதல்வர் பொறுப்பு

பழநி, மே 22: அரசு கல்லூரிகளில் பணிமூப்பின் அடிப்படையில் முதல்வர் பொறுப்பு வழங்க வேண்டுமென கல்லூரி கல்வி இயக்ககம்

அறிவித்துள்ளது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் முதல்வர் பதவியில் இருப்பவர்கள் ஓய்வு பெறும்போது, புதிதாக முதல்வர் நியமிக்கப்படும் வரை பொறுப்பு முதல்வர் நியமிக்கப்படுவது வழக்கம். தற்போது வரை நிர்வாக வசதிக்கேற்ப பொறுப்பு முதல்வர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் பொறுப்பு முதல்வர் நியமிப்பதற்கு புதிய வழிமுறைகளை கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

சிறுபான்மை கல்லூரிகள் உட்பட அனைத்து அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும் பணியில் மூத்த பேராசிரியரையே, பணிமூப்பின் அடிப்படையில் பொறுப்பு முதல்வராக நியமனம் செய்ய வேண்டும். மேலும், கல்லூரியின் நிரந்தர முதல்வர் விடுப்பில் அல்லது வேறு பணியின் நிமித்தமாக செல்லும்போது கல்லூரியின் மூத்த பேராசிரியரை முதல்வர் பொறுப்பில் செயல்பட உரிய ஏற்பாடு செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: