×

வேட்பாளர்கள், முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் எண்ணப்படும் கலெக்டர் சாந்தா தகவல்

பெரம்பலூர்,மே 22: நாளை (23ம்தேதி) காலை 8மணிமுதல் தபால் வாக்குகள் எண்ணப்படும் எனபெரம்பலூரில் வேட்பாளர்கள், முகவர்களுக்கு நடந்த கலந்தாய் வுக் கூட்டத்தில்  கலெக்டர் சாந்தா தெரிவித்தார். பெரம்பலூர் பாராளுமன்றத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், முகவர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் பெரம்பலூர் கலெக்டர்அலுவலகக் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு பெரம்பலூர்  கலெக்டர் சாந்தா தலைமை வகித்துப் பேசுகையில்,கடந்த ஏப்ரல் 18ம்தேதியன்று நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குஉட்பட்ட துறையூர், மண்ணச்சநல்லூர், லால் குடி, முசிறி, குளித்தலை, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட வாக் குச்சாவடிகளில் பதிவான வாக்குகள்அனைத்தும் தனலெட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன வளாகத்தில் பாதுகாப்பாக அறைகளில்வைத்துப் பூட்டி சீல்வைக்கப்பட்டு பாது காக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனை த்தும் நாளை 23ம்தேதி எண்ணப்பட உள்ளன.

Tags : Santha ,agents ,
× RELATED ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு: 400 ஏஜெண்டுகளின் சொத்துக்கள் முடக்கம்!