×

விவசாயத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் தமமுக வலியுறுத்தல்

நாகை,மே22: விவசாயத்தை அழிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நாகையில் நேற்று நடந்தது.  மாவட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார். ஒன்றிய இணைச் செயலாளர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை அழிக்கும் ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஷேல் எரிவாயு போன்ற திட்டத்தை மத்திய  அரசு கைவிட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதை செயல்படுத்தினால் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் சீர்செய்ய வேண்டும். நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகமான ஏரி, குளங்கள் காணாமல், ஆக்கிரமிப்புகள் பிடியில் உள்ளது. உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரி, குளங்களை காப்பாற்ற வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொறுப்பாளர்கள் சீதாராமன், முருகேசபாண்டியன், மார்ட்டின், மைக்கேல்ராஜ், நகர செயலாளர் மதியழகன் நன்றி கூறினார்.

Tags : DMK ,government ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி