×

காரைக்காலில் வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கு இறுதி கட்ட பயிற்சி

காரைக்கால், மே 22:  காரைக்காலில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும்  ஊழியர்களுக்கு இறுதி கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. நடந்து முடிந்த புதுச்சேரி மக்களவை தேர்தலில், காரைக்கால் மாவட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாளை (23ம்தேதி) காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் உள்ள கலைஞர் மு.கருணாநிதி பட்டமேற்படிப்பு மையத்தில் எண்ணப்படவுள்ளது. இப்பணியில் ஈடுபடவுள்ள வாக்கு எண்ணும் அதிகாரிகள், உதவியாளர்கள், நுண்ணறி பார்வையாளர்களுக்கான பயிற்சி, காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் ஏற்கெனவே நடைபெற்றது. இந்த பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்கள், நுண்ணறி பார்வையாளர் உள்ளிட்ட பிற பிரிவு அதிகாரிகளுக்கான பயிற்சி காமராஜர் நிர்வாக வளாகத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. தற்போது அதிகாரிகள் முன்னிலையில் இயந்திரங்களை கையாளும் ஊழியர்களுக்கான இறுதி கட்ட பயிற்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. மாவட்ட துணை கலெக்டர் (வருவாய்) எம். ஆதர்ஷ் கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து பணியில் ஈடுபடும் ஊழியர்களின் கடமைகள் குறித்து விளக்கி பேசினார். பண்டித ஜவாஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மோகன் கலந்துகொண்டு, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் உதவியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கமளித்தார். இயந்திரங்களையும், விவிபாட் இயந்திரங்களை கையாளும் முறை, வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கவேண்டிய பணிகள் குறித்தும் விளக்கப்பட்டது.

Tags : Karaikal ,
× RELATED விழிப்புணர்வு வாசகத்துடன் பால்...