நொய்யல் குறுக்கு சாலை ஆற்றுப்பாலத்தில் மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

க.பரமத்தி, மே.22: கரூர், ஈரோடு மாவட்டங்களை இணைக் கும் நொய்யல் குறுக்கு சாலை ஆற்றுப் பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா? என்ற நீண்ட நாள் எதிர் பார்ப்பில் வாகன ஓட்டிகள் உள்ளனர். கரூர், கொடுமுடி செல்லும் நெடுஞ்சாலையில் 21 கி.மீ. தொலைவில் நொய்யல் குறுக்கு சாலை பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. இதன் அருகே கரூர், ஈரோடு மாவட்டங்களின் எல்லைப் பகுதியாக நொய்யல் குறுக்கு சாலையில் நொய்யல் ஆற்றுப்பாலம் உள்ளது. 1955ம் ஆண்டு ரூ.3.21 லட்சத் தில் கட்டி முடிக்கப்பட்டு உடனடியாக பயன் பாட்டுக்கு வந்த இந்த பாலத்தில் அன்று முதல் இன்று வரை மின் விளக்குகள் அமைக்கப் படவில்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பாலத்தின் வழியாக வரும் அனைத்து வாகன ஓட்டிகளும், இரவில் நடந்து செல்லும் பொது மக்களும் பெரிதும் அவதிப் பட்டு வருகின்றனர். இவ்வாறு 60 ஆண்டுகளுக்கு மேலாக மின் விளக்குகள் இல்லாததை பொதுப்பணித்துறையும், வேட்டமங்கலம் ஊராட்சியும் கண்டு கொள்ளவில்லை என பொது மக்கள் இந்த வழியாக செல்லும் இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.


இரவு வேளையில் இருள் நிறைந்து காணப்படும் இப்பாலத்தின் வழியாகச் செல்வோரிடம் வழிப் பறி கொள்ளை நடக்க வாய்ப்புள்ளது. மேலும், பாலத் தின் மேல் பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால், பாலத்தின் அடியில் செல்லும் ஆற்றுப் பகுதிகளில் சமூக விரோத செயல்கள் அரங்கேறுவதாக விவசாயிகள் பலர் குறை கூறுகின்றனர். இது குறித்து வாகன ஓட்டிகள் பாதசாரிகள் சிலர் கூறுகையில், இந்த பாலம் கட்டப்பட்டு 60ஆண்டாகி விட்டது. இதன் தடுப்பு சுவர்களில் உள்ள கான் கிரீட்கள் பல்வேறு இடங்களில் உதிர்ந்து விட்டது. இதை சீரமைக்கப் படுவதுடன் பாலம் பகுதி இரவில் வெளிச்சம் இன்றி இருள் நிறைந்து காணப்ப டுவதால் பாலத்திற்கு அடியில் குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் அதோடுகுறு கிய பாலமாக உள்ளதால் இரவு நேரத்தில் பாலத்தை கடக்கும் போது சைக்கிளில் செல்வோர் பலரும் சற்று பயத்துடன் கடக்க வேண்டியுள்ளது என் றனர். எனவே பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க சம்பந்தப் பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும் என இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் நீண்ட நாள்காளக எதிர்பார்க்கின்றனர்.

Tags : river ,Noyyar ,
× RELATED நாகை நீடாமடவிளாகம் பகுதியில்...