இரவு நேரங்களில் நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத நபர்கள் தடுத்தால் நிறுத்த வேண்டாம்

கரூர், மே 22: இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் வாகனங்களை நிறுத்தினால் நிறுத்த வேண்டாம் என ஓட்டுனர்களுக்கு எஸ்பி அறிவுறுத்தி உள்ளார். கரூர் மாவட்ட பகுதி தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களை அடையாளம் தெரியாத நபர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மறைவிடங்களில் பெண் வேடமிட்டும், டார்ச் லைட் அடித்தும் பாலியல்உறவுக்கு அழைப்பதுபோல வாகனங்களை நிறுத்தி பின்னர் 4அல்லது 5நபர்கள் ஓட்டுனரிடம்இருந்து பணம்நகையை திருடிசென்று விடுகின்றனர். எனவே வாகன ஓட்டுனர்கள் இரவு நேரங்களில் சாலையில் பயணம் செய்யும்போது அடையாளம் தெரியாத நபர்கள் வாகனங்களை நிறுத்தினால் நிறுத்த வேண்டாம், இயற்கை உபாதைகளுக்காக நிறுத்த வேண்டியிருந்தால் அதற்காக ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்தும் இடங்களில் அல்லது ஆள்நடமாட்டம்உள்ள ஊர்பகுதிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டும் என எஸ்பி விக்ரமன் தெரிவித்துள்ளார்.


Tags : persons ,highway ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பிக்க அழைப்பு