ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக 14 மேஜைகள் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல்

கரூர்,மே 22:  கரூர் தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகன்நேற்று நிருபர்களிடம் கூறியது: கரூர் பாராளுமன்ற தொகுதிமற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வாக்குஎண்ணிக்கை நாளை(23ம்தேதி) தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. நோட்டாவுடன்சேர்த்து கரூர் பாராளுமன்ற தொகுதியில் 43வேட்பாளர்கள், அரவக்குறிச்சி சட்டமனற் இடைத்தேர்தலில் 63வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காலை 8மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதனை தொடர்ந்து 8.30மணிக்கு மின்னணுவாக்குப்பதிவுஇயந்திரத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கை துவங்கும். வாக்குஎண்ணிக்கைக்காக சிறப்பு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பார்வையாளர் விக்கி வினித் மணப்பாறை, விராலிமலை, பொதுப்பார்வையாளர் ஹரிபிரதாப்சாகித் அரவக்குறிச்சி எம்பி, எம்எல்ஏ தொகுதி, பிரசாந்த்குமார் கிருஷ்ணராயபுரம், கரூர், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி எண்ணிக்கையை பார்வையிடுவார்கள்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக 14 மேசைகள்போடப்பட்டு வாக்குஎண்ணிக்கை நடைபெறும். ஒருமேசைக்கு 3பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். உதவியாளர், கண்காணிப்பாளர், மைக்ரோஅப்சர்வர் ஆவர். இதில் மைக்ரோ அப்சர்வர் மத்திய அரசு பணியாளர்.

ஒரு சுற்றுமுடிந்ததும் உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர் பார்வையாளர் மேசைக்கு கொண்டுவந்து சரிபார்க்கப்பட்டு முடிவுகள்உடனடியாக அதிகாரபூர்வமாக சுவிதா போர்ட்டலில் பதிவேற்றம் செய்யப்படும். 5 வாக்குச்சவாடிகளின் விவிபாட் இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு சீட்டுக்கள்எண்ணப்படும். இவை இயந்திர வாக்குப்பதிவுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். விவிபாட் இயந்திரத்தில் பதிவான வாக்குதான் இறுதியானதாக எடுத்துக்கொள்ளப்படும்.  ஊடக மையத்தில் பத்திரிகை, ஊடகத்தினருக்கு சுற்றுவாரியாக முடிவுகள் தெரிவிக்கப்படும். இந்த மையத்தில்மட்டுமே செல்போன் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். வேறுஎங்கும் பயன்படுத்த அனுமதி கிடையாது.
ஊடகமையம், எண்ணிக்கை மையம், மேலும் வளாகத்தில் சாமியானா பந்தல் அமைத்து  என 3இடங்களில்  சுற்று நிலவரத்தை காணொளியில தெரிந்துகொள்ள எற்பாடு செய்யப்பட்டுள்ளது. எம்பி தொகுதியில் இடம்பெற்றுள்ள 6சட்டமன்ற தொகுதிகள், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி என மொத்தம் 7தொகுதி தேர்தல் முடிவுகள் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மூன்றடுக்கு பாதுகாப்பு

கரூர் எஸ்பி விக்ரமன் கூறுகையில், துணை ராணுவப்படையினர் வாக்குஎண்ணிக்கைக்குகூடுதலா பயன்படுத்தப்படுகின்றனர். 72பேர் ஒருகம்பெனி வீதம் இரண்டு கம்பெனி வீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மேலும் போலீசார் 1200பேர் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவம், சிறப்புக்காவல்படை, போலீசார் என உள்ளேயும்,வெளியேயும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்குஎண்ணிக்கை அமைதியாக நடைபெற அனைத்து பாதுகாப்புஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.

Tags : election commission ,officer ,
× RELATED உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான...