டூவீலர் மீது லாரி மோதல்: வாலிபர் பலி

குளித்தலை, மே 22:   டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.    கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த வடக்கு மயிலாடி யைச் சேர்ந்த ரத்தினம் மகன் தங்கராஜ்(25)/ இவர் வாழைக்காய் வெட்டும் கூலித் தொழிலாளி. நேற்று இரவு மணப்பாறை சாலையில் குளித்தலையில் இருந்து வடக்கு மயிலாடிக்குஇருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார் அப்போது அதே வழியில் பின்னால் வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்  இதுகுறித்து குளித்தலை போலீசார் விசாரித்து வருகின்றனர்

Tags : Larry Clash ,
× RELATED டூவீலரில் மது விற்றவர் கைது 86 பாட்டில்கள் பறிமுதல்