×

கரூர் மாரியம்மன் கோயில் திருவிழா 27ம் தேதி தேரோட்டம்

கரூர், மே 22: கரூர் மாரியம்மன்கோயில் திருவிழா கடந்த 12ம்தேதிகம்பம் நடுதலுடன் தொடங்கியது. 17மதேதி பூச்சொரிதல் விழாநடைபெற்றது.விடிய விடிய கரூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பூத்தட்டு ரதங்கள் கோயிலைநோக்கி வந்தன. வண்ணவிளக்குகளாலும், பூக்களாலும் மாரியம்மன்அலங்காரத்தில் பூத்தட்டு ரதங்கள் கோயிலை அடைந்ததும்அங்கு வழிபாடு செய்தனர். 19ம்தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சிக்குப்பின்னர் தினமும் காலை பல்லக்கு அலங்காரம், இரவு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதிஉலா நடைபெற்று வருகிறது. தினமும் ஏராளமான பெண்கள், பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.

தேர்த்திருவிழா வரும் 27ம்தேதி (திங்கள்) நடைபெறுகிறது. காலை 7,05மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுப்பார்கள். வரும் 26. 27, மாவிளக்கு, பால்குடம்எடுத்தல், 27, 28ம்தேதிகளில் அக்னி சட்டிஎடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள்நேர்த்திகடனை நிறைவேற்றுகின்றனர். அமராவதி ஆற்றில் நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய விழாவான கம்பம் ஆற்றில் விடும் விழா வரும் 29ம்தேதி (புதன்) நடைபெறுகிறது. அன்று மாலை 5.15மணிக்கு கோயிலில் சிறப்பு பூஜைகள்நடத்தப்பட்டு கம்பம் எடுக்கப்படும்.பின்னர் வழிநெடுக பக்தர்கள் தரிசனத்திற்குப்பின்னர் அமராவதி ஆற்றுக்குகொண்டுவரப்பட்டு அங்கு அமைக்கப்படும் அகழியில் விடப்படும். பின்னர் பிரமாண்ட வாணவேடிக்கை நடைபெறும். விழாவையொட்டி அன்றுகரூர் மாவட்டத்திற்கு அரசு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : festival ,Karur Mariamman temple ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!