×

வேட்பாளர்கள்,முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் வாக்கு எண்ணும் பணி அமைதியாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும் தேர்தல் நடத்தும் அலுவலர் வேண்டுகோள்

கரூர்,மே 22:  வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து வேட்பாளர்கள்,முகவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று மாலை  கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான அன்பழகன் தலைமை வகித்தார். எஸ்பி விக்ரம் முன்னிலைவகித்தார். கரூர் பாராளுமன்ற தொகுதி, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நாளை (23ம்தேதி) தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெறஉள்ளது. கூட்டத்தில் தேர்தல் நடத்தும்அலுவலர் கூறுகையில், கரூர் எம்பிதேர்தல், அரவக்குறிச்சிசட்டமன்ற தொகுதிஇடைத்தேர்தல் வாக்குஎண்ணிக்கை பணிக்கான மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் காலை 5மணிக்கு முன்னதாகவே வந்துவிடுவார்கள். எண்ணுகை மேற்பார்வையாளர்கள்,உதவியாளர்கள் எந்தெந்த மேசையில் பணியாற்ற உள்ளனர் என்பதை அன்று காலை 5மணிக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே அவர்களுக்கு தெரியவரும்.

காலை 8மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்படும்.பின்னர் 8.30மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்கு எண்ணும் பணி துவங்கும். வேட்பாளர்கள் அவர்களது முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்போது கைபேசி, லேப்டாப், ஐபேட், உள்பட எந்தவொரு மின்னணு சாதனத்தையும் எடுத்து வரக்கூடாது. சாதாரண கால்குலேட்டர் மட்டும் தேவைப்பட்டால் எடுத்துவரலாம். மேலும் உங்களுக்குவழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையினை அணிந்துவர வேண்டும், வாக்குஎண்ணும் பணிக்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14மேசைகள்போடப்பட்டிருக்கும். ஒருமேசைக்கும் 3பேர் பணியில் இருப்பர். வாக்கு எண்ணிக்கையின்போது அனைத்து வாக்குகளும் குறிக்கப்பட்ட பின்னர் வாக்குஎண்ணுகை மேற்பார்வையாளரால் கையொப்பம் இடப்பட்டு, அப்போது இருக்கும்அனைத்து முகவர்களிடமும் கையொப்பம்பெறப்படும். வாக்குஎண்ணும் பணிகள்அமைதியான முறையில் நடைபெற அனைவரும் முழுஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார். கலெக்டரின்நேர்முக உதவியாளர்கள் செல்வசுரபி(பொது), ரவிசந்திரன் (தேர்தல்), உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சரவணமூர்த்தி (கரூர்), மீனாட்சி (அரவக்குறிச்சி), மல்லிகா (கிருஷ்ணராயபுரம்), காமராஜ் (மணப்பாறை),ராமு (வேடசந்தூர்), கீதா (விராலிமலை), உதவிகலெக்டர்கள்கணேஷ், லீலாவதி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Agents Consultation Meeting ,
× RELATED கல்வி நிலையங்களில்...