வாகன சோதனையில் 3 கொள்ளையர்கள் கைது

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் போலீசார் நேற்று முன்தினம் இரவு சிந்தாமணி நகர் சிக்னல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த 3 பேரை, சந்தேகத்தின்பேரில் மடக்கி பிடித்து

விசாரித்தனர். அதில், விருகம்பாக்கம் லட்சுமி நகர், 3வது தெருவை சேர்ந்த சூர்யா (19), விருகம்பாக்கம் கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த சக்திவேல் (19), விருகம்பாக்கம் 1வது குறுக்கு தெருவை சேர்ந்த நேசமணி (20) என்பதும், இவர்கள், கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி, அண்ணாநகர் ‘க்யூ’ பிளாக் பகுதியை சேர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுரேஷ் (40) என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து, ₹40 ஆயிரம் ரொக்கம் மற்றும் ₹30 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு டாலர்களை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 220 வெளிநாட்டு டாலர்கள் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: