சிறுமியிடம் செல்போன் பறித்த சிறுவன் உட்பட 2 பேர் கைது

பெரம்பூர்: தண்டையார்பேட்டை கார்நேசன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடையில் நேற்று 15 வயது சிறுமி, தனது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்துவிட்டு, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், சிறுமியின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிசெல்ல முயன்றனர். அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, திருடர்களை துரத்தி சென்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க ேவகமாக பைக்கை ஓட்டியதால், இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அவர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து ஆர்.கே.நகர் போலீசில் ஒப்படைத்தனர்.  போலீசார் விசாரணையில் அவர்கள், தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த ரூபன்குமார் (18) மற்றும் கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ரூபன்குமாரை புழல் சிறையில் அடைத்தனர். 16 வயது சிறுவனை கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
Advertising
Advertising

Related Stories: