பல்லாவரம் பகுதியில் தண்ணீர் பஞ்சம் ஏரிகளில் ஆழ்துளை கிணறு அமைத்து மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும்: நகராட்சியில் மார்க்சிஸ்ட் மனு

தாம்பரம்: பல்லாவரம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னையை சமாளிக்க ஏரிகளில் ஆழ்துளை கிணறு அமைத்து, மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.  பல்லாவரம் நகராட்சியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில், பொது குழாய்கள் மூலம் வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதுதவிர முக்கிய பகுதிகளில் குழாய்கள் அமைத்து 24 மணி நேரமும் பாலாற்று குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கோடை காலம் தொடங்கியுள்ளதால், வாரத்திற்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த குடிநீர் கடந்த 2 வாரங்களாக வருவதில்லை. பாலாற்று குடிநீர் விநியோகமும் கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரி, முன்னாள் எம்எல்ஏ பீமராவ் தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் நரசிம்மன், நகர செயலாளர் பிரபாகரன், நிர்வாகிகள் ஜீவா, ராஜேந்திரன், பாண்டியன் உட்பட பலர் பல்லாவரம்  நகராட்சி அலுவலகத்தில், நேற்று நகராட்சி ஆணையர் செந்தில் முருகன், நகராட்சி பொறியாளர் கருப்பையராஜா ஆகியோரை நேரில் சந்தித்து மனுஅளித்

தனர். அதில், பல்லாவரம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, லாரிகளில் கூடுதலாக தண்ணீர் வழங்க வேண்டும்.  திருநீர்மலை பெரிய ஏரி தண்ணீரை சுத்திகரித்து பயன்படுத்த வேண்டும். பல்லாவரம் பெரிய ஏரி, அஸ்தினாபுரம் ஏரி உட்பட நகராட்சி பகுதிகளில் உள்ள ஏரிகளில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என தெரிவித்து இருந்தனர். கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

Related Stories: