பெண் மர்மச்சாவு

சாத்தான்குளம், மே 22:  பொள்ளாச்சி பொன்னாபுரம் சத்தியராஜ் காலனியைச் சேர்ந்தவர் சேகர் (64). இவருக்கு 2மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். நரிகுறவரான இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த உறவினர் ராஜேந்திரன் மனைவி சுசிலா (45) என்பவருக்கும் இடையே தகாத பழக்கம் ஏற்பட்டதால் அவர்களது குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் அங்கிருந்து சாத்தான்குளம் பகுதிக்கு வந்து ஊசி, பாசி விற்று வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுசிலா சாத்தான்குளம் தீயணைப்பு நிலையம் எதிரே திடீரென இறந்து கிடந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: