×

கோவில்பட்டி அகில இந்திய ஹாக்கி போட்டியில் மும்பை,சென்னை அணிகள் வெற்றி

கோவில்பட்டி, மே 22: கோவில்பட்டியில் லட்சுமியம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஹாக்கி போட்டியில் நேற்று நடந்த 6ம் நாள் போட்டியில் ஆல்இந்தியா கஸ்டம்ஸ் அன்ட் ஜிஎஸ்டி மும்பை அணி மற்றும் தமிழ்நாடு போலீஸ் சென்னை அணியினர் வெற்றி பெற்றனர்.    கோவில்பட்டி செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 11வது அகில இந்திய அளவிலான ஹாக்கி போட்டி கடந்த 16ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்று 6ம் நாள் போட்டி நடந்தது. காலை 6.30 மணிக்கு நடந்த முதல் ஆட்டத்தில் ஆல்இந்தியா கஸ்டம்ஸ் அன்ட் ஜிஎஸ்டி மும்பை அணியுடன் சென்னை சாய் அணியினர் மோதினர். இதில் ஆல்இந்தியா கஸ்டம்ஸ் அன்ட் ஜிஎஸ்டி மும்பை அணியினர் 4:1 எனும் கோல்கணக்கில் வெற்றி பெற்றனர். இதையடுத்து மாலையில் நடந்த 2வது ஆட்டத்தில் சிஐஎஸ்எப் சண்டிகர் அணியுடன் தமிழ்நாடு போலீஸ் சென்னை அணியினர் மோதினர். இதில் தமிழ்நாடு போலீஸ் சென்னை அணியினர் 2:1 எனும் கோல்கணக்கில் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து நடந்த 3வது ஆட்டத்தில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியுடன் புனே பிஇஜி அன்ட் சென்ட்ரல் கிர்கீ ஹாக்கி அணியினர் மோதினர். இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு சமநிலை பெற்றனர். தொடர்ந்து நடந்தது 4வது ஆட்டத்தில் ஈஸ்ட் கோஸ்ட் ரயில்வே புவனேஷ்வர் அணியுடன் பெங்களூரு கனரா வங்கி அணியினர் விளையாடினர். போட்டியின் 7வது நாளான இன்று (22ம் தேதி) காலை 6.30 மணிக்கு முதல் ஆட்டத்தில் நியூடெல்லி நேஷனல் ஹாக்கி அகாடமி அணியுடன் சென்னை தெற்கு ரயில்வே அணியும், தொடர்ந்து மாலையில் நடக்கும் 2வது ஆட்டத்தில் பெங்களூரு ஹாக்கி அசோசியேசன் பெங்களூரு அணியுடன் சென்னை இந்தியன் வங்கி அணியும், பின்னர் நடக்கும் 3வது ஆட்டத்தில் சென்னை ஐசிஎப் அணியுடன் புனே பிஇஜி அன்ட் சென்டர் கிர்கி அணியும், 4வது ஆட்டத்தில் செகந்திராபாத் சவுத்சென்ட்ரல் ரயில்வே அணியுடன் கர்நாடகா ஹாக்கி கூர்க் அணியும் மோதுகின்றனர்.

Tags : Mumbai ,teams ,Chennai ,tournament ,Kovilpatti ,
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...