வீட்டை உடைத்து திருட்டு

சாத்தான்குளம், மே 22: சாத்தான்குளம் அருகே உள்ள அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் நடராஜன் மனைவி வசந்தா (61). இவர் அதே ஊரில் உள்ள கனகராஜ் என்பவரது வீட்டில் வேலை பார்த்து வருகிறார்  மதுரையில் நடந்த கனகராஜ் மகன் திருமணத்துக்கு இரண்டு நாளுக்கு முன்னர் வீட்டை பூட்டி விட்டு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் காணப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், வீட்டுக்குள் சென்று பார்த்த போது 3 பித்தளை குடங்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து வசந்தா தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார்.  எஸ்.ஐ சுரேஷ்குமார் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: