நகை, பணத்துடன் இளம்பெண் மாயம் கணவர் புகார்

சாத்தான்குளம், மே 22: சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளத்தைச் சேர்ந்தவர் ராஜமணி மகன் ஜான்பாண்டி (44), கூலித்தொழிலாளியான இவருக்கு மனைவி மிக்கேல் சாந்தி (40) மற்றும்இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த10ம் தேதி ஜான்பாண்டி வேலைக்கு சென்று விட்டார்.    அப்போது அவரது மனைவி மிக்கேல் சாந்தி வீட்டில் இருந்த எல்ஐசி பாண்ட், 3பவுன் நகை மற்றும் 45 ஆயிரம் ரூபாயை எடுத்து கொண்டு  வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை கணவர் ஜான்பாண்டி பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கு சென்றார் என தெரியவில்லை. இதுகுறித்து ஜான்பாண்டி சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். புகாரின பேரில் எஸ்ஐ சாந்தி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: