×

இலவச மருத்துவ முகாம்

தென்தாமரைகுளம், மே 22:சாமிதோப்பு  அய்யா வைகுண்டரின் அன்புவனமும், ஈத்தாமொழி சிவா மருத்துவமனையும் இணைந்து  தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ்  இலவச  மருத்துவ முகாம் சாமிதோப்பு அன்புவனத்தில் நடத்தினர். முகாமுக்கு பாலபிரஜாபதி  அடிகளார் தலைமை வகித்தார். வளவன், பேராசிரியர் தர்மரஜினி முன்னிலை  வகித்தனர். சிவா மருத்துவமனை மருத்துவர் அருண்முகேஷ், தொடர்பாளர் மதன்  ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.  நிகழ்ச்சியில் அய்யா வைகுண்டர் தொழிற்சங்க நிர்வாகிகள் ரத்தினமணி, வக்கீல்  செல்லவடிவு, பொருளாளர் மகாராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 100க்கும்  மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர்.

Tags : camp ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு