ஊதியூரில் இன்று மின்தடை

காங்கயம்,மே21:காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ஊதியூர், ராசாத்தாவலசு, முத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் வட்டமலை, ஊதியூர், கம்பளியம்பட்டி. முத்தூர், வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம். ஆகிய இடங்களில் இன்று(21ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

சூறாவளிக்கு பாதித்த தென்னைகளுக்கு

இழப்பீடு கேட்டு கலெக்டரிடம் மனு

திருப்பூர்,மே21:திருப்பூரில், மழை மற்றும் சூறாவளி காற்றினால் முறிந்து விழுந்த தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பொங்கலூர், ராமம்பாளையம், தேவனம்பாளையம், செட்டிபாளையம் கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் தென்னை, வாழை மற்றும் பப்பாளி பயிரிட்டுள்ளனர். கடந்த 17ம் தேதி, இப்பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில் பல ஆண்டுகாலமாக பயிரிட்டு வந்த தென்னைகள் காற்றில் வேரோடு சாய்ந்தது.  இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிவிட்டது. அதேபோல் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் காற்றில் சரிந்து விழுந்தது. அதேபோல் சிறிய முதலிட்டில் பப்பாளி பயிரிட்டு வந்த விவசாயிகளும், கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனை, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இத்தகைய, சூறாவளியினால் எங்கள் பகுதியில் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விவசாயிகள் பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர். ஆகவே, ஒரு தென்னைக்குகு ரூ.30 ஆயிரம் வீதம், வாழைக்கு ரூ. 1000 மற்றும்  பப்பாளிக்கு ரூ.500 இழப்பீடு வழங்கினால் மட்டுமே  எங்கள் குடும்பங்கள் இழப்பை சரி செய்ய முடியும். மேலும், சேதம் அடைந்த தென்னைகளை அப்புறப்படுத்தவே பல ஆயிரம் செலவாகும். ஆகவே தென்னை விவசாயிகளுக்கு உரிய முறையில் கணக்கெடுத்து மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்

Related Stories: