சோலார் மின் உற்பத்தி நிறுவனம் மீது விவசாயிகள் கலெக்டரிடம் புகார்

திருப்பூர்,மே 21: உடுமலை அருகேஉள்ள ஆமந்தகடவு பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் காற்றாலை மூலமாக மின்சாரம் தயாரித்து வந்த நிலைியல், தற்போது சோலார் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணிக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இங்கு தயாரிக்கும் மின்சாரத்தினை கொண்டு செல்ல மின் பாதைகளை தாழ்வாகவும், விவசாயிகள் விளைநிலங்களுக்கும் செல்லும் பாதையை மறித்தும் பிஏபி வாய்க்கால் ஆக்கிரமித்துள்ளதால் 300 ஏக்கரில் பெய்யும் மழைநீர் அருகில் இருக்கும் விளைநிலங்கள் வழியாக கிராமத்திற்குள் புகுவதால் சிரமமாக உள்ளது. எனவே தனியார் நிறுவனத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து மக்களை காப்பாற்றுமாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: