×

அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி கூடலூர் தாலுகா அலுவலகம் முற்றுகை

கூடலூர், மே 21: அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கோரி கூடலூர் தாலுகா அலுவலகத்தை ஓவேலி கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.  நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்து ஓவேலி பேரூராட்சி உள்ளது. இப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 1969ம் ஆண்டு ஜமீன் ஒழிப்பு சட்டத்தின் கீழ் அரசுடமையாக்கப்பட்ட நிலங்களில் வசித்து வரும் மக்கள் தங்களது விவசாய நிலங்களுக்கு உரிமை கோரியும், வீடுகளுக்கு மின் இணைப்பு கோரியும், சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி ேகட்டு பல அண்டு காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

இந்நிலையில், அரசு அதிகாரிகள் அப்பகுதி மக்களை வெளியேற்றும் வகையில் செயல்படுவதாகவும், விவசாயத்திற்கு தேவையான உரம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதைத் தடை செய்து வருகின்றனர். மேலும் பழுதடைந்த வீடுகளை சீரமைக்க கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல தடை விதிப்பதாகவும், ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இது போன்ற மக்கள் விரோத செயல்களால் அங்கிருந்து மக்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறி நேற்று கூடலூர் தலுகா அலுவலகம் முன் அப்பகுதி மக்கள் சுமார்  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாவட்ட கலெக்டர் மற்றும் கூடலூர் கோட்டாட்சியர், வனத்துறை அலுவலர் ஒருவருக்கு ஒருவர் முரணான தகவல்களை மக்களிடம் கூறி வருவதாக குற்றம் சாட்டினர். அதில் நீண்ட கால கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : office blockade ,Slayur Taluk ,
× RELATED மருத்துவ சேர்க்கை இடஒதுக்கீட்டில்...