×

மானாமதுரை அருகே ஜீப் கவிழ்ந்து டிரைவர் பலி

மானாமதுரை, மே 21:  சிவகங்கை கொட்டக்குடி தெருவை சேர்ந்தவர் கணேசன்(38). இவர் மானாமதுரை துணைமின்நிலையத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை பணிமுடிந்து உதவிப்பொறியாளர் மற்றொரு கணேசன் அழைத்து கொண்டு மானாமதுரையில் இருந்து சிவகங்கை சென்றுகொண்டிருந்தார். அப்போது காட்டூரணி விலக்கு அருகே சென்றபோது ஜீப் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிரைவர் கணேசன் பலத்தகாயமடைந்தார். உதவிப்பொறியாளர் கணேசனுக்கும் படுகாயமடைந்தார். இருவரையும் ஆம்புலன்ஸ்சில் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் டிரைவர் கணேசன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். புகாரின்பேரில் சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Jeep ,Manamadurai ,
× RELATED ஜீப் மோதி வாலிபர் பலி