சித்தேரி ஏரியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வலியுறுத்தல்

ஆட்டையாம்பட்டி, மே 21: ஆட்டையாம்பட்டி அருகே சித்தேரி ஏரியில், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க ேவண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆட்டையாம்பட்டி அருகே சித்தேரி பகுதியில், சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. ஆட்டையாம்பட்டி, பாப்பாரப்பட்டி, ராஜபாளையம் பகுதிகளில் சேகரமாகும் கழிவுநீர் இந்த ஏரியில் கலக்கிறது. இதனால் ஆண்டு தோறும் தண்ணீர் வற்றாமல் இருக்கும். இதன் மூலம், சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் நிலத்தடி நீர் வற்றாமல் உள்ளது. இந்நிலையில் ஏரி முழுவதும், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தொற்று ேநாய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஏரியில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி ஏரியை தூர்வார, வீரபாண்டி ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என, விவசாயிகள் ேவண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: