கடும் வறட்சியால் குடியிருப்பு பகுதிக்கு இரைதேடி வரும் மயில்கள்

ஆட்டையாம்பட்டி, மே 21: ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள கண்டர்குலமாணிக்கம், எட்டிமாணிக்கம்பட்டி, செங்கோடபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள சிறு,சிறு குன்றுகள் அதிக அளவில் உள்ளன. இங்கு 50க்கும் மேற்பட்ட மயில்கள் வாழ்ந்து வருகின்றன. தற்போது கத்திரி வெயில் சுட்டெரிப்பதால் குன்றில் உள்ள மரம், செடிகள் காய்ந்து விட்டன. தண்ணீரும் இல்லை. தவிர, வயல்வெளிகள், காடுகளும் மழையின்றி காய்ந்து கிடக்கிறது. இதனால் குன்றுகளில் வளர்ந்து வந்த மயில்கள் உணவு மற்றும் தண்ணீர் தேடி, அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கிராமங்களுக்கு வரும் மயில்கள், இங்குள்ள மக்கள் வைக்கும் தண்ணீர் மற்றும் தானியங்களை உண்டு செல்கின்றன. கோடை விடுமுறையில் வீடுகளில் உள்ள குழந்தைகள், மயில்கள் வந்து செல்வதை  ஆச்சரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் பார்த்து ரசிக்கின்றனர்.

Related Stories: